அரிசி விலையேற்றத்துக்கு நெல் ஆலை உரிமையாளர்களே காரணம் – பந்துல சுட்டிக்காட்டு

 குணவர்தன
குணவர்தன

பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு விநியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக உறுதியளித்திருந்த நெல் ஆலை உரிமையாளர்கள் அதனை கடைப்பிடிக்க  தவறியுள்ளனர்.

இந்தநிலையில், அரசாங்கம் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சிலர் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.