இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 34,973 பேருக்கு கொரோனா!

corona article1
corona article1

இந்தியாவில் இன்று(11) காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 34,973 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய, தொற்று உறுதியானர்களின் மொத்த எண்ணிக்கை 33,174,954 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை 260 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை, 442,009 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், 37,681 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 32,342,299 ஆக அதிகரித்துள்ளது.

390,646 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.