வவுனியா வடக்கில் நூறு வயதுடைய வயோதிப தாய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

IMG 5188ee46c6e3b84b2f0a9d56a648ef0d V
IMG 5188ee46c6e3b84b2f0a9d56a648ef0d V

வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் நடமாடும் மருத்துவ சேவையினரால்  முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்  அனைத்து மக்களும்  தடுப்பூசியினை பெற்று வருகின்றனர். சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் 100 வயது நிரம்பிய ஒரு முதியவர் தடுப்பூசி போட முன் வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

அந்தவகையில் நெடுங்கேணி, மருதோடைக்கிராமத்தில் வசிக்கும்  100 வயது  நிரம்பிய அன்னை ஒருவர்  கொரோனா தடுப்பூசி போட விரும்புவதாக கூறியதற்கிணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் நடமாடும் தடுப்பூசிச்சேவையின் மூலம் முதலாவது தடுப்பூசி நேற்றையதினம் (11)  வழங்கப்பட்டது. 

இவ்வாறு இந்த வயதிலும் தடுப்பூசி போடவேண்டுமென்று விழிப்புணர்வுடைய ஒருவரிற்கு தடுப்பூசி வழங்கியமையையிட்டு பெருமை கொள்வதாக வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.