நேற்றைய தினம் 200,000க்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

sri lanka covid vaccine AP 533x355 1
sri lanka covid vaccine AP 533x355 1

நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் 225,521 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 70,260 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 119,346 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

5,116 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும்1,366 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அதேவேளை17,311 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும், 29 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

11,936 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 157 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.