நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இரு தினங்களுக்கு கூடவுள்ளது

Parliment in one site 800x534 1
Parliment in one site 800x534 1

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மீண்டும் கூடவுள்ளது.

சபை முதல்வர் தினேஸ்குணவர்தன தலைமையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நாளைய தினம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, எமது மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளினது யோசனைகளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக குறித்த கட்சிகளுக்கு நாளைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது யோசனைகளை முன்வைத்திருந்தன.

இந்த நிலையில், மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் முறைமையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்தார்.