மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு

water cut
water cut

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று (15) காலை 08 மணி முதல் நாளை (16) காலை 08 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

மாத்தளை மாவட்டத்தின் உடுகம, பாலபத்வெல, தொஸ்தரவத்த, தும்கொலவத்த, மகுனுகஹருப்ப, சொப்வத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த மற்றும் நிகவல பி மற்றும் சி பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும்.