மட்டக்களப்பு நகரில் உள்ள அச்சகம் ஒன்றில் இருந்து பேப்பர் கட்டர் திருடிய இருவர் கைது

WhatsApp Image 2021 09 15 at 12.20.07
WhatsApp Image 2021 09 15 at 12.20.07

மட்டக்களப்பு நகர் திருகோணமலை வீதியிலுள்ள உள்ள பிரபல அச்சகம் ஒன்றில் இருந்து பேப்பர் கட்டர் ஒன்றை இன்று புதன்கிழமை (15) பகல் திருடிக் கொண்டு சென்று பழைய இரும்பு கடையில் 1200 ரூபாவிற்கு விற்பனை செய்த இரு கொள்ளையர்களை கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பேப்பர் கட்டரை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.

 குறித்த அச்சகத்தின் மேல்தளத்தில் களஞ்சியசாலை இருப்பதாகவும் அதுதிறந்துள்ள நிலையில் கடையின் கீழ்பகுதியில் வெளியால் அமைக்கப்பட்ட படிவழியால் மேல்தளத்திற்கு சம்பவதினமான இன்று பகல் இரு மோட்டர்சைக்கிளில் வந்த இருவர் சென்று அங்கிருந்த 27 ஆயிரம் ரூபா பெறுமதியான பேப்பார் கட்டர் ஒன்றை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.

கடையின் உள்பகுதியில் வேலைசெய்து கொண்டிருந்த ஒருவர்  கடையில் பெருத்தப்பட்ட சிசிரி கமராவை அவதானித்தபோது அங்கு இருவர் கடையின் களஞ்சியசாலையில் இருந்த  பேப்பர் கட்டரை இருவர் எடுத்துச் செல்வதை அவதானித்ததையடுத்து கடையின் வெளியே வந்தபோது கொள்ளையர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு ஒரு மோட்டர் சைக்கிளில் கொள்ளையடித்த பொருளுடன் சென்றதை கண்டு கொண்டனர்.

இதனையடுத்து கொள்ளையர்கள் விட்டுவிட்டு சென்ற மோட்டர்சைக்கிளை எடுப்பதற்கா வந்தபோது அவர்களை கடையின் பணியாளர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்ததையடுத்து இருவரையும் காவற்துறையினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் அமிர்தகழி, உப்போடை பகுதியைச் சேர்ந்த 30,31 வயதுடையவர்கள் எனவும் திருடிய பேப்பர் கட்டரை பழைய இரும்பு கடையில் 1200 ரூபாவிற்கு விற்றுள்ளாதாகவும் கொழும்பில் தனியர் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றுவதாகவும் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் திரும்ப இன்று கொழும்புக்கு செல்ல இருந்ததாகவும் காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் கொள்ளையிட்ட பேப்பர்கட்டரை மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டர்சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.