வவுனியா வடக்கில் 108 வயதுடைய வயோதிப தந்தைக்கு தடுப்பூசி!

FB IMG 1631794009619
FB IMG 1631794009619

வயோதிப தந்தையொருவருக்கு இன்றையதினம் (16) வவுனியா நெடுங்கேணி பகுதியில் நடமாடும் மருத்துவ சேவையினரால் முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசியினை பெற்றுவருகின்றனர். சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் 108 வயது நிரம்பிய ஒரு முதியவர் தடுப்பூசி போட முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

அந்தவகையில் நெடுங்கேணி, சன்னாசிபரந்தன் கிராமத்தில் வசிக்கும் 108 வயது நிரம்பிய தந்தை ஒருவர் கொரோனா தடுப்பூசி போட விரும்புவதாக கூறியதற்கிணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் நடமாடும் தடுப்பூசிச்சேவையின் மூலம் முதலாவது தடுப்பூசி இன்றையதினம் (16) வழங்கப்பட்டது. 

இவ்வாறு இந்த வயதிலும் தடுப்பூசி போடவேண்டுமென்று விழிப்புணர்வுடைய ஒருவரிற்கு அவரது இல்லத்தில் வைத்து அவரது குடும்பத்தினரதும் அவரதும் வேண்டுகோளிற்கிணங்க  தடுப்பூசி வழங்கியமையையிட்டு பெருமை கொள்வதாக வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் 100  வயதுடைய அன்னை ஒருவருக்கும் இம்மாதம் (11) ஆம் திகதி முதலாவது தடுப்பூசி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.