முன்னாள் கிராம அலுவலர் ப.உமாபதி கொரோனாவால் மரணம்!

Untitled 1 copy 7
Untitled 1 copy 7

முன்னாள் கிராம அலுவலரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான பஞ்சாட்சரம் உமாபதி அவர்கள் கொவிட் தொற்றால் இன்று மரணமடைந்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக கிராம அலுவலராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னும் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவருமான பஞ்சாட்சரம் உமாபதி அவர்கள் கொவிட் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டனி சார்பில் வன்னித் தேர்தல் தோகுதியில் போட்டியிட்டு இருந்ததுடன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் ஆவார்.

இதேவேளை, இவரது தாயார் கடந்த 2 ஆம் திகதி கொவிட் தொற்று காரணமாக மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.