ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

1572834821 heroin 2
1572834821 heroin 2

அவிசாவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தல்துவ சந்தைப் பகுதி மற்றும் வெல்லவீதிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பழைய வீதி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 208 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து போதைப்பொருள் விற்பனையில் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம், 06 தொலைபேசிகள், இரண்டு கார்கள் என்பற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவிசாவளை, வெல்லவீதிய, பொரளை மற்றும் கொழும்பு – 12 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.