வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மின்னல் ஏற்பட வாய்ப்பு!

lightningbolts
lightningbolts

நாளை (19) காலை 7.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மின்னல் தாக்கம் தொடர்பான அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், இன்று பிற்பகல் 2.30 மணி முதல் நாளை காலை 7.30 மணி வரை இந்த அறிக்கை செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் இதன்போது பாரிய மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் வயல் வெளிகள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் நீர்நிலைகளில் இருப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.