update; நீராட சென்று காணாமல் போன இருவரும் சடலமாக மீட்பு

death in ganga river
death in ganga river

வட்டவளை – லொனக் தோட்ட பகுதியில் உள்ள குளத்தில் நீராட சென்று காணாமல் போயிருந்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்கள் இன்று(20) காலை மீட்கப்பட்டுள்ளது. 21 மற்றும் 38 வயதுடைய இருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தமது நண்பர்களுடன் குறித்த குளத்தில் நீராட சென்றிருந்தவேளை, நேற்று மாலை காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில், அவர்களது சடலங்களை காவல்துறையினரும் பிரதேச மக்களும் இணைந்து மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.