கொட்டகலையில் வாகன விபத்து; மூவர் காயம்

202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1
202001271942059765 kodairoad accident injured husband and wife SECVPF 1

திம்புள்ள பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.