நேற்றைய தினம் 228 645 பேருக்கு தடுப்பூசி

corona world4720 1597663078 1
corona world4720 1597663078 1

இலங்கையில் நேற்றைய தினம் 228 645 கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 777 பேருக்கும் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 33 ஆயிரத்து 462 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டது.

அதேபோல சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 165 பேருக்கும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 31 ஆயிரத்து 931 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டது.

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 37 ஆயிரத்து 234 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டது.

மேலும் ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 421 பேருக்கும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 89 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டது.

மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 2 ஆயிரத்து 346 பேருக்கும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 220 பேருக்கும் நேற்று செலுத்தப்பட்டது