இடைக்கால அரசாங்கத்தின் இலக்கு பெரும்பான்மை தான்!

1 Gamini
1 Gamini

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசாங்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இடைக்கால அரசாங்கம் தற்போது செயற்படுவதாக கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று அனைத்து இன மக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றுவிக்கப்படும். இடைக்கால அரசாங்கம் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளின் பெறுபேறு அதற்காக வழியமைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவினையும் கோரியது. ஆனால், தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கப் பெறவில்லை. அதற்கு பல்வேறு அரசியல் ரீதியான காரணிகள் செல்வாக்கு செலுத்தியதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.