மாவட்ட ரீதியில் செங்கலடி மாணவன் சாதனை!

mirunu
mirunu

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் செங்கலடி பிரதேசத்தினைச் சேர்ந்த மாணவன் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை சேர்ந்த விஜயசுதாகர் மிருனுகிருஷாந் எனும் மாணவன் 2.1326 வெட்டுப்புள்ளியை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினையும் தேசிய மட்டத்தில் 37வது இடத்தினையும் பெற்றுள்ளார்.

தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம்-A, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்-B, பொறியியல் தொழில்நுட்பத்தில்-B சித்தியினையும் பெற்று குறித்த சாதனையினை படைத்துள்ளார்.