நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்து கலந்துரையாடல்

Gl Peris
Gl Peris

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை இன்று சந்தித்துள்ளார்.

இதன்போது, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.

நியூசிலாந்து பால் மற்றும் விவசாயத் துறைகளில் இலங்கையுடன் கூட்டிணைந்துள்ளதுடன், இரு நாடுகளும் நட்புறவு ரீதியில் மேற்கொள்ள வேண்டிய விடயங்களை அடையாளம் காணவேண்டிய நேரம் வந்துள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டணியை நினைவுகூர்ந்த அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், கொழும்பில் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் திறக்கப்படுவதானது, இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பெரும் பங்களிப்பை அளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் உள்நாட்டுப் பால் தொழிற்துறையை புத்துயிர் பெறச் செய்வதில் அரசாங்கம் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.