சமுக வலைத்தளங்கள் விரைவாக வழமைக்கு திரும்பும் – வட்ஸ்அப் ருவிட்டரில் தெரிவிப்பு!

messenger integration
messenger integration

மிக விரைவில் வட்ஸ்அப் மீண்டும் இயங்குமென வட்ஸ்அப் நிறுவனம் தனது ருவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

அந்த பதிவில் சிலர் தற்போது வட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றுள்ளது.

உலகளவில் முன்னணி சமுகவலைத்தளங்கள் பல நாடுகளிலும் இன்று இரவு செயலிழந்துள்ளது.

முகநூல்,வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியனவே செயலிழந்துள்ளன. இதனால் சமூகவலைத்தள பாவனையாளர்கள் பெரிதும் குழப்பமடைந்துள்ளனர்.

முகநூல்,வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றன ஒரே குழுமத்தின் சமூக வலைத்தளங்களாகும்.