இந்திய இழுவைப் படகு குருநகர் மீனவர்கள் மீது தாக்குதல்

20211005 110338
20211005 110338

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்திய தோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று 12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை கக்கடதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப்படகுகளால் குருநகர் பகுதி மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்திய இழுவை படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்தொழில் அமைச்சு மட்டத்தில் முறையிட்டுள்ளோம்.

இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் இந்திய அரசினால் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

அத்தோடு நடுக்கடலில் மீனவர்களை தாக்குவதோடு அவர்களின் உயிர்களை காப்பாற்றாது கடலில் தத்தளிக்கிற நிலை காணப்படுகின்றது

இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இயற்கை அனர்த்தம் உள்ள நிலைமையில் தாக்கி சேதமாக்கப்பட்ட படகினை ஓட முடியாத நிலை காணப்பட்டிருந்தால் அந்த 3 மீனவர்களும் உயிரிழக்க கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கும்

எனவே இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்குரிய நடவடிக்கையினை கடற்தொழில் அமைச்சும் அரசாங்கமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.