ஒக்டோபர் 21 பாடசாலைகள் மீள திறக்கப்படும்

1625372487 school 02 1
1625372487 school 02 1

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு வகுப்புகளை எதிர்வரும் ஒக்டோபர் 21 மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் தீர்மானித்துள்ளனர்.

கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அனைத்து மாகாண ஆளுநர்கள் இன்று முன்னெடுத்த கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரிவுக்கான வகுப்புகளின் ஆரம்ப திகதி தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்.

நான்கு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் தரம் 1 முதல் 5 வரை 3884 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.