கதிர்காமத்தில் இராணுவ கொடிக்கு ஆசிவேண்டி விஷேட பூஜை!

1 1
1 1

கதிர்காமத்தில் இராணுவ கொடிக்கு ஆசிவேண்டி விஷேட பூஜை இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தி (ஒக்டோபர் 10) நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல்
ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், சிப்பாய்களின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை (3) கிரிவெஹெர மற்றும் கதிர்காமம் ஆலய வளாகங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது இராணுவ கொடிகள் சிப்பாய்களால் வரிசைக்கிரமமாக ஏந்திச் செல்லப்பட்டு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து இராணுவ படையணிகள், பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள், பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் இராணுவக் கொடிகளானது ஆசிர்வாதத்திற்காக மூன்று முறை கிரிவெஹெர தூபியை வாத்திய இசையுடன் சுற்றி எடுத்துச் செல்லப்பட்டதோடு அவை விஷேட மேடையில்
வைக்கப்பட்டன.

அதனையடுத்து ‘கப்ரு்க’ பூஜை’ (புனித தூபியை சுற்றிலும் கொடி சாத்தும் நிகழ்வு) இடம்பெற்றதுடன் சகலரும் எண்ணெய் தீபங்களை ஏற்றியதை தொடர்ந்து கிலன்பச பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பின்னர் கிரிவெஹெரவின் தலைமை தேரரால் மத சடங்குள் நிகழ்த்தப்பட்ட பின்னர் பிரதம அதிதியால் தேரர்களுக்கு “பிரிகர” வழங்கி வைக்கப்பட்டது. அதனையடுத்து வெந்தாமரை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஷை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு மத வழிபாடுகளுக்காக கதிர்காம ஆலய வளாகத்திற்கு சென்றிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால்
கிரிவெஹெரவின் வென் தூபியை நிர்மாணிக்கும் பணிகளுக்கான நன்கொடை வண. கோபாவாக்க தம்மிந்த தேரர் அவர்களிடம் வழங்கி வைத்தார்.