யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

IMG 6389fac9780b390de4df067139e2fd77 V
IMG 6389fac9780b390de4df067139e2fd77 V

யாழ் மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க கொவிட் – 19 நிலைமைக்கு உதவும் முகமாக அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு அமெரிக்கன் ஜெவிஸ் வேர்ல்ட் சேவை நிதி அனுசரணையில் ரூபா 35 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களிடம் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.