இலங்கை – இந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் – ஜி.எல்.பீரிஸ்

Gl Peris
Gl Peris

திருகோணமலை எண்ணெய்தாங்கிகள் குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் அதிக கவனம் செலுத்தவில்லை. எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களும் தற்போதும் அமுலில் உள்ளன.

ஆகவே திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கவுள்ளதாக குறிப்பிடும் செய்தி தவறானது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரையறுக்க முடியாது. இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.

இலங்கையில் மருந்து உற்பத்தி, தகவல்தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளின் முதலீடுகளை விரிவுப்படுத்த இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.