விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

visa process bg

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (07) முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இந்த விசா செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.