நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இளைஞர்கள் இருவர் பலி

death25
death25

ஹாலிஎல பகுதியில் உள்ள ரிலா எல்ல நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வீரகெட்டிய மற்றும் தெஹியத்தகண்டிய ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹாலிஎல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.