உதயமாகுமா சஜித் பிரேமதாசாவின் புதிய கட்சி?

download 1 10
download 1 10

சஜித் பிரேமதாச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட, புதிய கூட்டணியை அமைப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைமைப் பிரச்சினைக்கு வழிவகுக்க மறுத்த நிலையில் சஜித் பிரேமதாச இந்த முடிவு எடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் பரந்துபட்ட கூட்டணி தற்போது 95% உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஜனவரி தொடக்கத்தில் இறுதி முடிவு அறிவிக்கப்படுமெனவும் கூறினார்.

அத்தோடு கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவில்லை என்றால் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரிந்து சென்று புதிய கட்சி உருவாக்கப்படுமெனவும் கூறினார்.