இறக்குமதி செய்யப்படவுள்ள 100,000 மெற்றிக் தொன் அரிசியில் ஒரு தொகுதி இன்று நாட்டிற்கு

2154c rice2bsack
2154c rice2bsack

இறக்குமதி செய்யப்படவுள்ள 100,000 மெற்றிக் தொன் அரிசியில் ஒரு தொகுதி இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரிசியுடனான கப்பல் இன்றைய தினத்திற்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதேநேரம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு கப்பல்கள் இறக்குமதி செய்யப்படும் அரிசியுடன் நாட்டை வந்தடையவுள்ளன.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி முதலாவதாகச் சதொசவுக்கும், பின்னர் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனை 100 ரூபாவுக்கும் குறைவாக மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.