ரிஷாட்டை சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

Rishat 1 750x375 1
Rishat 1 750x375 1

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தொலைக்காணொளி  தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.