சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

kaithu
kaithu

மினுவாங்கொடை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 333 சட்டவிரோத மதுபான போத்தல்களும், 2 செப்பு கம்பிகளும், ஒரு எரிவாயு கொள்கலனும், 4 பீப்பாய்களும் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.