ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் சுட்டுக்கொலை!

gun 1
gun 1

காலி, ஹபராதுவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹீனெட்டிகல – ஹெடிதெமலகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

46 வயதான சிசிர குமார எனும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இதன்போது கொல்லப்பட்டுள்ளார்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய், வட்டிக்கு பணம் பெற்ற ஒருவர் சரியாக அதனை மீளச் செலுத்தாததால் சுவீகாரமான காணியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

துப்பக்கிச் சூட்டினை நடத்தியோர் மோட்டார் சைக்கிளில் வந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை ஹபராதுவ காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.