எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு பல இடங்களில் மழைககான சாத்தியம்

Rainning
Rainning

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கடற்பிராந்தியங்களிலும் காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு காற்றின் வேகமானது 60 கிலோமீற்றர்வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.