புளியங்குளத்தில் கடைக்கு தீ வைத்து எரிப்பு

swarajya 2019 12 7984437e d647 4d5c adc0 e33aad7f11e5 fire
swarajya 2019 12 7984437e d647 4d5c adc0 e33aad7f11e5 fire

புளியங்குளம் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கடை ஒன்று அடித்து உடைக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (16) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான காணியை சுவீகரிப்பு செய்யும் நோக்கோடு குறித்த கடைக்கு தனியார் ஒருவர் தீ வைத்துள்ளதாகவும் குறித்த கூல்பார் கடையின் உள்ளே இருந்த தளபாடங்களை அடித்து உடைத்ததன் பின்னரே கடை எரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து கடை நடத்திவந்த நபரால் புளியங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு புளியங்குளம் காவற்துறையினர்ல் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.