பகமுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

vikatan 2020 03 89ae4e5f 12d1 4420 8812 f2a10d2bc7ff accident 1
vikatan 2020 03 89ae4e5f 12d1 4420 8812 f2a10d2bc7ff accident 1

பகமுன, லக்கல வீதியின் 26 – 27 கிலோ மீற்றர் கட்டை பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.