கர்ப்பிணி, இரு குழந்தைகள் உட்பட 10 பேர் குளவி கொட்டி வைத்தியசாலையில் சேர்ப்பு!

wasp
wasp

புத்தளம் மாவட்டம், தளுவ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 10 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் கர்ப்பிணி ஒருவரும், குழந்தைகள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.

தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் கலைந்து வந்து குறித்த பகுதியில் இருந்தவர்களைக்  கொட்டியுள்ளது.