பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம்

school 1 1

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று (21) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

கொவிட் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களையும், அதிபர்களையும் வரவேற்பதற்காகப் பாடசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல அதிபர் சங்கங்கள், இன்று (21) பாடசாலைக்கு சமுகமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

அதிபர்கள் பாடசாலைக்கு வருகின்றனர் என்பதானது, எவ்வித பிரச்சினையும் இல்லை என்ற நிலையினை உறுதிப்படுத்துகின்றது.

இந்நிலையில், பெருமளவான ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

முதலாம் கட்டத்தின் கீழ், 3,000 பாடசாலைகளைத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.