டெல்டா ப்ளஸ் கொவிட் திரிபு தொடர்பில் ஆய்வில் வௌியான தகவல்

delda
delda

நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபை விட டெல்டா ப்ளஸ் கொவிட் திரிபானது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த டெல்டா ப்ளஸ் கொவிட் திரிபால் பிரித்தானியாவில் இதுவரையில் 6 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீனாவில் கொவிட் பரவல் நிலைமை மீளவும் தீவிரமடைந்து வருகிறது.

கடந்த வாரத்தில் மாத்திரம் சீனாவின் 11 மாநிலங்களில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.