சீன உரம் தொடர்பில் மற்றுமொரு பரிசோதனை அவசியமில்லை – பேராசிரியர் புத்தி மாரம்பே

download 49
download 49

இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட, சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள உரத்தை மீண்டுமொருமுறை பரிசோதனைக்கு உட்படுத்த அவசியமில்லையெனப் பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

அது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேராசிரியர் புத்தி மாரம்பே குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனமொன்றிற்கு அனுப்பி, அதனை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு இணங்குவதாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ கொழும்பில் நேற்று (26) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது குறிப்பிட்டார்.