சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிப்பு!

grade 1 school children Sri Lanka
grade 1 school children Sri Lanka

சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

இதேநேரம், மாணவர்களின் இணை பாடவிதான செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி முறைமைகள் குறித்தும் கல்வி அமைச்சுடன் தங்களது கருத்துக்களைப் பரிமாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.