ஓமந்தையில் துப்பாக்கி மீட்பு

IMG 84d509a33760d417743e42dad8442d29 V
IMG 84d509a33760d417743e42dad8442d29 V

வவுனியா – ஓமந்தை பகுதியில் இருந்து கட்டு துப்பாக்கி ஒன்றினை இராணுவத்தினர் நேற்று (26) மீட்டுள்ளனர்.

ஓமந்தை பகுதியில் ஆயுதம் இருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்றினை மீட்டு ஓமந்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட கட்டுத்துப்பாக்கியை நீதிமன்றில் ஒப்படைக்கவும், சந்தேக நபர் மற்றும் துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.