துறைமுகங்களில் தேக்கிவைக்கப்பட்டுள்ள வாகனங்களின் பெறுமதி வீழ்ச்சியடைய வாய்ப்பு!

Temporarily Holding Vehicles and Other Non Essential Items
Temporarily Holding Vehicles and Other Non Essential Items

கொவிட்-19 பரவல் நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கடந்த ஆண்டு தடை விதித்தன் பின்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் தொடர்ந்தும் ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த செகுசு வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டமையினால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

எவ்வாறாயினும் ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலும் பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட வாகனங்கள் கொழும்பு துறைமுகத்திலும் தேங்கியுள்ளன.

குறித்த வாகனங்கள் சுங்கத்தினரால் விடுவிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்த தீர்மானங்கள் நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாரிய தொகை செலவிடப்பட்டு இந்த வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அவை சேதமடைவதோடு அவற்றின் பெறுமதி நாளாந்தம் வீழ்ச்சியடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.