19 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

1604593252 Police 2
1604593252 Police 2

19 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட இரண்டு பதில் பிரதிப் காவற்துறை மா அதிபர்கள் (Act. DIG), 2 பிரதிப் காவற்துறை மா அதிபர்கள் (DIG) உள்ளிட்ட 19 காவற்துறை அதிகாரிகளுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவின் அடிப்படையில், சேவையின் தேவை கருதி குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றத்திற்கு அமைய, ஒரு சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் (SSP), 7 உதவி காவற்துறை அத்தியட்சகர்கள் (ASP) மற்றும் 7 காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.