பேருந்து குடைசாய்ந்ததில் 14 பேர் காயம்

Sri Lanka Bus
Sri Lanka Bus

மாத்தளை – மஹாவெல கொலங்வத்த பகுதியில் தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் 12 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாத்தளையிலிருந்து – செலகம நோக்கி பயணித்த பஸ், மற்றுமொரு வாகனத்திற்கு வழிவிடும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வயலில் குடை சாய்ந்துள்ளது.

இந்த விபத்து இன்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாவெல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.