கரைதுறைப்பற்று பிரதேச சபை பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

download 3
download 3

கரைதுறைப்பற்று பிரதேச சபை தனது பிரதேச சபை எல்லைக்குட்ப்பட்ட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கென புதிதாக வடிவமைக்கப்பட உள்ள சபைக்கொடி, சபைக்கீதம், சபை இலச்சினை, மற்றும் சபை மகுடவாசகம் என்பவற்றுக்கு பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள், அபிப்பிராயங்கள், மாதிரிகள் என்பவற்றை எதிர்வரும் 08.11.2021ம் திகதிக்கு முன்பதாக நேரடியாகவோ அன்றி சபை தொலைநகல் 021-229-0001 மூலமாகவோ அல்லது சபை மின் அஞ்சல் pskpattu@gmail.com மூலமாகவோ அனுப்பி வைக்கும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றேன். என தெரிவித்தார்