போதைப்பொருளுக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் விசாரணை

1624090839 police 2
1624090839 police 2

மதுபானம் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் காவல்துறை தலைமையகத்தினூடாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய காவல்துறைமா அதிபர், மேல் மாகாணத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள 37 காவல்துறை உத்தியோகத்தர்களின் விபரங்களை சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 28 பேர் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து பிரபல செய்திப் பிரிவு ஒன்று வினவியபோது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனைத் தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவினரால் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தகவல்களினூடாக வெளிப்படுத்தப்படும் காவல்துறை உத்தியோகத்தர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதுடன், பின்னர் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்தார்.