வாகன விலைகளில் மாற்றம்!

3e11e7fe 098f7894 vehicles 850x460 acf cropped
3e11e7fe 098f7894 vehicles 850x460 acf cropped

சந்தையில் அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதீட்டின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுப்படுத்த முடியாத வகையில் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வாகனங்களின் உதிரிபாகங்கள், இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களினாலே அதிக விலைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.