முல்லைத்தீவில் சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் தேசிய நிகழ்வு ஆரம்பிப்பு!

received 854653698488024
received 854653698488024

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் நிலையான வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டம்_2021 சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் திட்டத்தினூடாக வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு மரக்கறி விதைப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு  முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

01.11.2021 திகதி தொடக்கம் 07.11.2021 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் நிலையான வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டம்_2021 சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் மரக்கறி  விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பப் பணிகள் நாடளாவிய ரீதியில்இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இன்று ஆரம்பிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட விதைப் பொதிகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அனிஞ்சியன்குளம் கிராமத்தில் இன்று மாலை 3 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த சௌபாக்கியா வீட்டுத்தோட்ட  வேலைத்திட்டத்தின் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மரக்கறி  விதைப் பொதிகள் வழங்கும் நிழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு குறித்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி ஆ.லதுமீரா  கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள்  கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒட்டறுத்தகுளம் கிராமத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த சௌபாக்கியா வீட்டுத்தோட்ட  வேலைத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மரக்கறி விதைப் பொதிகள் வழங்கும் நிழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு குறித்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் மாந்தை கிழக்கு உதவிப் பிரதேச செயலாளர் விவசாய திணைக்கள அதிகாரிகள் கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலும் குறித்த திட்டம் 4.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை பத்து மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களால் ஆரம்பித்து  வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.