கோத்தாபாயவின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

gotabaya 1
gotabaya 1

டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியக வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கூறி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது.

மெதமுலானவில் டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகத்தை நிர்மாணிக்கும் போது 33.9 மில்லியன் அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிசிரா டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன, பிரசன்னா ஜெயவர்தன, விஜித் மலல்கோடா மற்றும் எல்டிபி தெஹிதேனியா ஆகிய ஐந்து நீதிபதி குழு முன் பரிசீலிக்கப்பட்டது.

பின்னர் குழுவின் பெரும்பான்மை முடிவால் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதி குழு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதிகள் குழுவின் தலைவர் சிசிரா டி அப்ரூ அறிவித்தார். அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு அனுமதி வழங்க எந்தவொரு நியாயமான சட்ட அடிப்படையும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

இவ்வாறு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர் நீதிபதி குழுவின் பெரும்பான்மை முடிவினால் மனு நிராகரிக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டது,