யாழ் ஆயர் மேதகுகலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தீபாவளி வாழ்த்து செய்தி

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு காலநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு காலநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை

2021ஆம் ஆண்டிற்குரிய ஒளியின் பெருவிழாவான தீபாவளிப் பெருவிழாவை உலகம் முழுவதிலும் கொண்டாடும் இந்துசமய சகோதரர்கள் அனைவர்க்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.என்று யாழ் ஆயர் மேதகுகலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது தீபாவளி வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது

குடும்ப உறவுகள் மற்றும் நட்பு வட்டங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் எப்போதும் மகிழ்வானவை. அன்பையும் உறவையும் வளர்ப்பவை. இந்த வகையில் 2021ஆம் ஆண்டிற்குரிய தீபாவளிப் பெருவிழாஉங்கள் குடும்ப மற்றும் நட்பு உறவுகளைப் புனிதப்படுத்தி புதியதாக்கி அன்பையும் புரிந்துணர்வையும் எதிர்கால நம்பிக்கையையும் வளர்த்து ஒளியைத் தரும் ஒரு விழாவாக அமைய வாழ்த்துகிறோம்.இருளைப் பழிப்பதை விட ஒளியைப் ஏற்றுவதே சிறந்தது. ஒளியை எல்லோரும் விரும்புகிறார்கள். ஒளியில் எல்லோரும் வாழவே விரும்புகிறார்கள். இருளைப் பார்த்து எல்லோரும் பயப்பிடுகிறார்கள். இருள் வேண்டாமென ஓளியை ஏற்றுகிறார்கள்.

இருளுக்கும் ஒளிக்குமான போராட்டத்தில் ஒளியே வெல்ல வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் நன்மையே வெல்ல வேண்டும்.இருள் நிறைந்த துன்பமான வேதனை மிக்க வாழ்வை விடுத்து ஒளிமிகுந்த மகிழ்ச்சியான வாழ்வையே எல்லோரிற்கும் நாம் ஆசிக்க வேண்டும். இதையே நற்செய்தி ஏடுகள் பின்வருமாறு தெரிவிக்கின்றன.நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்… எவரும் விளக்கைஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்போது தான் அது வீட்டில் உள்ள அனைவர்க்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற் செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகதந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்-என்றார்