இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

rice
rice

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதென, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு, இதுவரை விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட தீர்வை வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட பண்ட தீர்வை வரி, 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்த வரித்திருத்தம் நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.