இரு வாரங்களில் 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!

download 10
download 10

எதிர்வரும் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது மூன்று மணித்தியாலம், 28 நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்றும், இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதன்போது, நிலவின் மேற்பரப்பு 97 சதவீதம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.

குறிப்பாக வட அமெரிக்க பிராந்தியத்துக்கு  இந்தச் சந்திர கிரகணம் தென்படும் என்றும்,  2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இது போன்றதொரு நீண்ட சந்திரக் கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா கணித்துள்ளது.

எதிர்வரும் எட்டு தசாப்தங்களில் மேலும் 179 சந்திர கிரகணங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சராசரியாக ஒரு வருடத்திற்கு இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி இவ்வருடத்துக்கான சந்திர கிரகணம் நிகழும் நிலையில், அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.